இன்றையத் தேதியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளவுக்கு அரசியல் பழிவாங்கலுக்குள்ளான தலைவர் யாராவது உலகத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தினத்துக்கு ஒன்று, இரண்டு என்று ஏறிச் சென்ற அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை இப்போது நூற்றைம்பதைத் தாண்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் முழு ஃபோர்மில் ஆடும் போது ஸ்கோர் மளமளவென்று ஏறுவதை செய்வதறியாது வேடிக்கை பார்த்த எண்பதுகளின் நாஸ்டால்ஜியா நாள்கள் இம்ரான்கானுக்கு ஞாபகம் வந்திருக்கக் கூடும்.
இத்தனைக்கும் பாகிஸ்தானில் நாளை அமெரிக்க ஸ்டைலில் ஒரு அதிபர் தேர்தல் வைத்தால் சந்தேகமே இல்லை. இம்ரான்கான் வரலாறு காணாத வெற்றி அடைவார். அப்படியென்றால் ஏன் அரபு வசந்தம் ஸ்டைலில் ஒரு புரட்சி செய்து பார்க்கக் கூடாது.? செய்யலாம் தான். ஆனால் அது ஒரு ரத்த அபிஷேகமாய் அமையும். பேரரசன் செங்கிஸ்கான் வேட்டையாடிவிட்டுச் சென்ற நகரங்கள் மாதிரி முழு தேசமும் பிணக்குவியலாய் மாறும். இம்ரான்கானுக்கு நவாஸ் ஷெரீப்களும், பூட்டோக்களும் மட்டும் எதிரி அல்ல, பாகிஸ்தான் ராணுவம் மிகப் பெரும் எதிரி. பாகிஸ்தானுக்கு எல்லாமாக இருக்கும் ஐ. எஸ் .ஐ என்றும் உளவுத்துறையோ பரம வைரி. ஆகவே, இம்ரான்கானால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரது சட்டத்தரணிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன்… ஆனானப்பட்ட தொண்டர் பட்டாளத்தல் கூட எதையும் கிழிக்க முடியவில்லை.
Add Comment