Home » ஊபருக்கு ஆப்பு
அறிவியல்-தொழில்நுட்பம்

ஊபருக்கு ஆப்பு

பத்து ஆண்டுகளுக்கு (2015 காலக்கட்டம்) முன்னர் மக்கள் பயணம்​ செய்யும் முறையை மாற்றி அமைத்தது ஊபர் செயலி. செல்பேசியை எடுத்து செயலியைத் தட்டினால் சில நிமிடங்களில் வாடகை கார் வரும், நாம் விரும்பிய இடத்தில் நம்மை இறக்கிவிடும். இந்த அமெரிக்க நிறுவனத்தோடு யாராலும் போட்டி போட முடியாது என்று நம்பப்பட்ட காலம் அது. அப்படியான ஊபரை, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து விரட்டிய சாதனையைச் செய்த நிறுவனம் கிராப் (Grab). இந்த அரிய வணிகப் பயணம் எப்படி நடந்தது என்பதைக் காணலாம்.

இன்றைக்குத் தென்கிழக்கு ஆசியாவின் எட்டு நாடுகளில் முன்னணிப் பயணச் செயலியாக இருக்கிறது கிராப். வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மியான்மார், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா ஆகியவை அந்த எட்டு நாடுகள். 750 நகரங்களில் கிராப் சேவை கிடைக்கிறது. 2025ஆம் ஆண்டில் கிராப் நிறுவனத்தின் வருமானம் சுமார் மூன்றரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் (முப்பதாயிரம் இந்திய ரூபாய்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்தளவு பெரிதாக வளர்ந்திருக்கும் இந்நிறுவனம், தொடங்கப்பட்டது 2012ஆம் ஆண்டு மலேசியாவில் “மை டேக்சி” (மலேய மொழியில் எனது டாக்ஸி) என்கிற பெயரில். தொடங்கியது “அந்தோணி தான்” (Antony Tan) மற்றும் “தான் ஹூயி லிங்” (Tan Hooi Ling).

“அந்தோணி தான்” மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை வழியில் வாகனத் துறையோடு நீண்ட தொடர்புடையது இவரது குடும்பம். இவரது முப்பாட்டன் டாக்ஸி ஒட்டுநராக வாழ்வைத் தொடங்கியவர். பாட்டன், ஜப்பான் நாட்டு கார்களை மலேசியாவிற்கு அறிமுகம் செய்தவர். தந்தை நடத்தியது, ஜப்பான் “நிசான்” கார்களை மலேசியாவில் தயாரித்து விற்பனை செய்யும் பெரிய குழுமம். இப்படியான பணக்கார பின்னணியில் வந்தவர், தந்தையின் விருப்பத்திற்கு எதிராக குடும்ப நிறுவனத்தை எடுத்து நடத்தாமல், தானாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பயணம் செய்தார். தனது பதினோராம் வயதில் காமிக்-புக்ஸ்களை விற்பனை செய்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் “பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை” இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் (HBS) எம்.பி.ஏ (MBA) முடித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!