2021ஆம் ஆண்டு. விக்கிபீடியாவுக்கு வயது இருபது. வாழ்த்துகள் சொல்கிறார் எலான் மஸ்க். 2022, விக்கிபீடியாவின் தனித்துவம் குறைந்துவிட்டது. இதுவும் மஸ்க் சொன்னதே.
2023, விக்கிபீடியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் தருவதாகச் சொல்கிறார். அவர்களுடைய பெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி வசைபாடுகிறார். என்ன பெயர் என்று இங்கு குறிப்பிடமுடியாது.
2024ஆம் ஆண்டின் இறுதியில், விக்கிபீடியாவின் நிலைப்பாடுகள் ஏற்கமுடியாதவை. அவர்களை இனி வோக்பீடியா (Wokepedia) என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார். யாரும் அவர்களுக்கு நிதியுதவிகள் செய்யாதீர்கள் என்றொரு இலவச அறிவுரையும் வழங்கினார் மஸ்க்.
விக்கிபீடியாவுக்கு ஒரு மாற்று வேண்டும் என்னும் கருத்தினை 2025இன் தொடக்கத்திலேயே உறுதியாகப் பதிவு செய்கிறார் மஸ்க். அக்டோபர் 27ஆம் தேதி, போட்டி விக்கிபீடியா வந்துவிடுகிறது. அதற்கு மஸ்க் வைத்த பெயர் க்ரோகிபீடியா.















Add Comment