Home » குரு தத் 100: காவிய நாயகன்
வெள்ளித்திரை

குரு தத் 100: காவிய நாயகன்

‘என்னிடம் பணம், புகழ், வசதி, மரியாதை என்று எல்லாம் இருக்கிறது. இருந்தும் வெறுமை என்னைச் சூழ்ந்திருக்கிறது. தனிமை மட்டுமே துணை. எனது விஸ்கி, அதில் கொஞ்சம் தூக்க மாத்திரைகள். இவை மட்டுமே என்னைச் சற்று அமைதிப்படுத்தும் எனத் தோன்றுகிறது. என்னுடைய சுகம், துக்கம், வெற்றி, தோல்வி என்று எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்தவை இவை மட்டும்தான்.’

இறப்பதற்குச் சில நாள்கள் முன்னதாக இயக்குநர் குரு தத் சொன்ன வார்த்தைகள் இவை. இந்தியத் திரைப்பட உலகின் மிகச் சிறந்த படைப்புகள் எனக் கருதப்படும் பியாஸா, காகஸ் கே பூல், ஆர் பார், மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55, பாஸி உள்படப் பல மறக்க முடியாத திரைப்படங்களைக் கொடுத்தவர்.

ஒரு வயதான மனிதர் அந்த ஸ்டுடியோவின் மிகப்பெரிய கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகிறார். உணவு நேரம் என்பதால் அரங்கில் யாருமில்லை. அங்குள்ள கேமரா, இயக்குநரின் நாற்காலியென எல்லாவற்றையும் கைகளால் தடவிக் கொடுக்கிறார். மேலே படிகளேறிச் சென்று விளக்குகள் கட்டும் மாடத்தில் அமர்ந்து கீழே பார்க்கிறார். மெதுவாகத் தளம் உயிர் பெறுகிறது. விளக்குகள், ஓசைகள், இசை, உரையாடல் எனப் பரபரக்க ஆரம்பிக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!