குடியேறிகளின் நாடு அமெரிக்கா. கிட்டத்தட்ட 400 மில்லியனை நெருங்கிவிட்ட அமெரிக்க மக்கள்தொகையில் பலர் வெகு காலத்திற்கு முன்பு இங்கே புலம்பெயர்ந்தவர்கள். சிலர் சமீபத்தில் வந்தவர்கள். ஆனால் எல்லாரிடமும் ஒரு புலம்பெயர்ந்த கதை உண்டு. தொழிலில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் தேசம் அல்ல இது. கட்டுமானத் தொழிலாளராக இருக்கட்டும், தூய்மைப் பணியாளராக இருக்கட்டும், அல்லது சிகை திருத்தும் நிபுணராக இருக்கட்டும் – அவரவர் தொழில், அவரவர் வாழ்வு.
கல்விக்கான கடன் பெற்று அதை அடைக்க உழைப்பதை விட, தொழில் கல்வி கற்கவே பல அமெரிக்க இளைஞர்கள் விரும்பிய காலம் ஒன்று இருந்தது. இப்போதும் இங்கே தொழில் கல்வி கற்றுத்தரும் பல பள்ளிகள் உள்ளன. அதனால் தொழில்நுட்பத் துறைக்கு மெத்தப் படித்தவர்கள் தேவை ஏற்பட்டபோது அயல்நாட்டினரைக் கொண்டு நிரப்ப அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்தன. அதை உள்ளூர் மக்களும் கண்டுகொள்ளவில்லை.
H1B, திறன்களையும் உயர்கல்வியையும் அடிப்படையாகக் கொண்டு தரப்படும் விசா. அமெரிக்காவில் இல்லாத திறன்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வெளிநாட்டில் இருந்து வல்லுநர்களை நிறுவனங்கள் அழைத்துவர இந்த விசா அவசியம்.














Add Comment