சுமார் 9,45,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தான்சானியா, ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. 1961இல் சுதந்திரம் பெற்றது, பின்னர் 1962இல் குடியரசாக மாறியது. 1964இல் டாங்கன்யிகா மற்றும் சான்சிபார் ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்ததன் மூலம் முழு இறையாண்மை கொண்ட நாடாக உருவானது. இந்நாட்டின் பரப்பளவு, இயற்கை வளங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் காரணமாக சஃபாரிகளின் நாடு (வனப்பயணங்களின் நாடு) என்று அழைக்கப்படுகிறது. உலகின் உயர்ந்த தனித்த மலைகளில் ஒன்றான கிளிமாஞ்சாரோ, செரன்கெட்டி தேசியப் பூங்கா, நொரோங்கரோ பாதுகாப்புப் பகுதி ஆகியவை தான்சானியாவின் அடையாளங்கள்.
தான்சானியாவில் சுமார் 130 வெவ்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.அவர்களில் மாசாய், ஹட்சாபே, பாராபைக், ஆகியோர் தங்களைப் பூர்வீக மக்கள் என அடையாளப்படுத்துகின்றனர். மாசாய் மக்கள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பாரம்பரிய மேய்ச்சல் வாழ்க்கை முறை, வண்ணமயமான ஆடைகள், தனித்துவமான கலாசாரம் ஆகியவற்றுக்காக உலகறியப்பட்டவர்கள்.
ஆனால் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மாசாய் மக்களின் வாழ்வாதாரமும் நில உரிமைகளும் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, நொரோங்கரோ பாதுகாப்புப் பகுதி மற்றும் லேக் நாட்ரான் பகுதியிலிருந்து மாசாய் மக்களை வெளியேற்றும் அரசின் முயற்சி இன்று சர்வதேச மனித உரிமை விவாதப் பொருளாகியிருக்கிறது.















Add Comment