Home » மன்னிப்பாயா?
வரலாறு

மன்னிப்பாயா?

மே 27 அன்று “Thug life” திரைப்படம் தொடர்பான விழாவில், “தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது!” என்று நடிகர் கமலஹாசன் பேசியது, கர்நாடகாவில் பலத்த சர்ச்சையானது. கமல் மன்னிப்பு கேட்கும் வரை, இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட முடியாதென்று கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சங்கம் தீர்மானித்தது. இது குறித்த வழக்கில், நீதிமன்றம் சற்றுக் கடுமையாகக் கருத்து தெரிவித்திருந்த போதும், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாதென்று கமல் கூறிவிட்டார். படமும் கர்நாடகாவில் திரையிடப்படவில்லை.

“எது முதலில் உருவானது- தமிழா?கன்னடமா?” என்கிற இந்தப் பிரச்சனையின் “மய்ய”ப் புள்ளியை விட்டுவிடுவோம். “Thug life” படம் குறித்த வழக்கில் நீதிமன்றம் கூறியபடி, இது மொழியியல் அறிஞரின் வேலையாக இருக்கட்டும். இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரும் வழியாகப் பார்க்கப்பெறும் “மன்னிப்புக் கேட்டல்” குறித்த வரலாற்று நிகழ்வுகளுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மன்னிப்புக் கேட்ட நபராக அசோகரைக் கருதலாம். கி.மு 261இல் நடந்த கலிங்கப் போரில் இலட்சக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. வெற்றி பெற்றிருந்தாலும், போரின் பயங்கரம் அசோகரிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கலிங்கப் போரின் விளைவால் அசோகர் மனமுடைந்து போனதாக, அவரின் பதிமூன்றாவது பெரும்பாறைக் கல்வெட்டில் (13th Major Rock Edict) குறிப்பிடப்பட்டுள்ளது. போரைக் கைவிட்ட அசோகர், புத்தமதத்தைத் தழுவினார்.

இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தில், ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் தொடங்கினார் (1920). பொதுமக்கள் பெருமளவில் பங்குபெறத் தொடங்கி, முக்கியமான கட்டத்தை நோக்கிப் போராட்டம் சென்றுகொண்டிருந்த பொழுது, ஒரு சம்பவம் நடைபெற்றது. சௌரி-சௌரா (Chauri Chaura) என்ற இடத்தில் இருந்த காவல் நிலையத்தைப் பொதுமக்கள் கொளுத்தினர் (பிப்ரவரி 1922). இருபத்திரண்டு காவல்துறையினர் காவல் நிலையத்துக்குள்ளேயே தீக்கிரையாயினர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட காந்தியடிகள், உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அகிம்சைப் போராட்டத்திற்குப் பொதுமக்கள் தயாராக இருந்ததாகத் தாம் தவறாகக் கணித்ததற்கு மன்னிப்புக் கோரினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!