கண்டங்களின் நுழைவாயில்
ஒரு நாட்டின் மீதான பெரும்பாலான படையெடுப்புகளுக்கு அந்நாட்டில் உள்ள வளங்கள் காரணமாக இருக்கும். பண்டைய சிரியாவில் நதிகள் இருந்தன. நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால் இவை மட்டும் புற்றீசல் போலப் பேரரசுகளை சிரியாவை நோக்கி வரச் செய்யவில்லை.
உலக வரைபடத்தை எடுத்து சிரியாவின் இருப்பிடத்தை உற்றுக் கவனித்தால் இதன் காரணம் புரியும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைகிற பகுதிக்கு சிரியா எனப் பெயரிடப்பட்டிருக்கும்.
இம்மூன்று கண்டங்களுக்கு இடையே பயணிப்பவர்கள் சிரியாவைக் கடந்துதான் செல்ல வேண்டியிருந்தது.










Add Comment