நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் ஆச்சரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டுவந்த இரு திராவிடக் கட்சிகளும் இம்முறை ஒன்றாக எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமரப்போவது இதுவரை தமிழகம் எண்ணிப் பார்க்காத காட்சி. ஆரம்பித்த முதல் சில ஆண்டுகளுக்குள்ளாகவே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பலம் பெற்ற கட்சியாக தவெகவை மாற்றியுள்ளனர் தமிழக வாக்காளர்கள். அமையவிருப்பது தொங்கு சட்டமன்றமே என்றாலும் இந்தப் புதிய எழுச்சி யாரும் எதிர்பாராதது.
ஒருவகையில் பார்த்தால், இது முந்தைய கழக ஆட்சிகளின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகவும், மாற்றமே இல்லாமல் மாறி மாறி மீண்டும் ஒரே முகங்களைத் தேர்ந்தெடுத்த சலிப்பாகவும் இருக்கக்கூடும். கூடுதலாக, விஜய்யின் திரை நாயக பிம்பமும், அவர் அளித்த வாக்குறுதிகளும் மக்கள் அலையை அவர் பக்கம் திருப்பியிருப்பதாகத் தெரிகிறது.















Add Comment