Home » அங்க என்ன சொல்லுது?
இந்தியா

அங்க என்ன சொல்லுது?

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த திங்கள்கிழமை கடுமையான பாதுகாப்புடன் பல்வேறு கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில மாநிலங்களில் முடிவுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு வங்காளத்தில் 293 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 2021ஆம் ஆண்டு நடந்த மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக எழுபத்து ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது. இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே சமமான போட்டி இருக்கும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் முடிவுகள் தலைகீழாக இருந்தன.

தீவிர வாக்காளர் திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் காரணமின்றி நீக்கப்பட்டதாக மமதா பானர்ஜி உச்ச நீதிமன்றம் வரை சென்று தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முறையிட்டார். இப்படித் தேர்தலுக்கு முன்பே பல களேபரங்கள் நடைபெற்ற அம்மாநிலத்தில் அதிகபட்சமாக 92.47% வாக்குகள் பதிவாகின.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!