Home » அதிபர்களின் வழிகாட்டி
கிச்சன் கேபினட்

அதிபர்களின் வழிகாட்டி

சாரா

சாரா சில்ரெஸ் போல்க்

அரசியல் பாரம்பரியங்களைவிட மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேநேரம், காதலித்த ஒருவனின் காரியம் யாவிலும் கைகொடுத்த ஓர் இரும்புப் பெண்தான் சாரா.

சாரா சில்ரெஸ் போல்க், 1803 செப்டம்பர் 4 அன்று டென்னசி மாநிலத்தில் உள்ள மர்ஃப்ரீஸ்போரோவில் (Murfreesboro) பிறந்தார். ஜோல் சில்ரெஸ் (Joel Childress) மற்றும் எலிசபெத் வித்ஸிட் (Elizabeth Whitsitt) ஆகியோரின் ஆறு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

சாராவின் தந்தை ஜோல் சில்ரெஸ், டென்னசி எல்லைப்புறங்களில் விவசாயியாகவும், வணிகராகவும், நிலங்கள் வாங்கி விற்பவராகவும் பணியாற்றினார். குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலையில் விற்றுச் செல்வம் சேர்த்தவர். அடிமைகளைக் கொண்டு பெரிய தோட்டங்களில் விவசாயம் நடத்தினார். ஒரு சிறு தகராற்றில் ஒருவரைக் கொலை செய்தபோதும், அப்போதைய நீதிபதிகளால் மன்னிக்கப்படும் அளவுக்குச் செல்வாக்கும் செல்வமும் கொண்டவர் அவர். இந்தப் பணக்கார குடும்பம், ப்ரெஸ்பட்டேரியன் கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!