Home » மரபணு மந்திரவாதி
ஆளுமை

மரபணு மந்திரவாதி

க்ரெய்க் வென்ட்டர்.

வியட்நாமில் உள்ள டா நாங் (Da Nang) என்ற துறைமுக நகரத்தில் அமெரிக்காவின் போர் வீரர்களுக்கான மருத்துவ முகாம். கடற்படை வீரர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியைச் செய்யும் உதவியாளர் கேட்டதெல்லாம் அழுகுரல்கள். தொடக்கத்தில் இருந்தே இந்தப் போரில் அவனுக்கு விருப்பம் இல்லை. கட்டாயத்தின் பேரில்தான் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். அதிக நுண்ணறிவுத் திறன் (IQ)  இருந்ததால் மருத்துவ உதவியாளனாகப் பயிற்சி தரப்பட்டு மருத்துவ முகாமுக்கு வருகிறான். அது அவன் வாழ்க்கையை மாற்றுகிறது.

அந்த இளைஞன்தான் க்ரெய்க் வென்ட்டர். பின்னாளில் உலகின் மிகப்பெரிய அறிவியல் சாகசத்தை நடத்தி, அமெரிக்க அதிபர்களாலேயே அங்கீகரிக்கப்படுவான் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்தத் தொடக்கம் அந்தப் போர்க்களத்தின் கொடூரங்களிலிருந்து பிறந்தது. இன்று பலரின் உயிர்களை நோய்களிலிருந்து காக்கிறது.

சால்ட் லேக் சிட்டியில் பிறந்து, கலிஃபோர்னியாவின் மில்ப்ரே (Millbrae) என்ற சிறு நகரில் வளர்ந்த வென்ட்டர், படிப்பில் சுமாரான மாணவன், ஆனால் நீச்சலில் தேர்ந்தவன். வீட்டுக்கு அருகே ரயில் தண்டவாளங்கள் இருந்தன. ரயில்களுடன் யார் ஓடுவது என்று விளையாடுவதும், Half Moon Bayஇன் குளிர்ந்த அலைகளில் சர்ஃபிங் செய்வதும் அவனுக்குப் பிடித்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!