Home » எரியாத நாளில்லை – 1
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 1

அருவருப்பூட்டக்கூடிய சர்வாதிகார ஆட்சியாலும் மிக நீண்ட உள்நாட்டுப் போரினாலும் ஆதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பாலும் சிதறுண்டு போன தேசம், சிரியா. செறிவான சரித்திரமும் வளமான நிலமும் வாய்த்தென்ன? காலந்தோறும் பிடுங்கித் தின்ற ஆட்சியாளர்களையே அத்தேசம் கண்டு வந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டில் குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்த சிரியப் போர் உலகுக்கு உரக்கத் தெரிவிக்கும் செய்திகள் பல உண்டு. இந்தத் தொடர் சிரியாவின் கண்ணீரும் உதிரமும் தோய்ந்த அரசியல் வரலாற்றைத் தெளிவாக விவரிக்கிறது.

உங்களுக்காகவே நான்!

துருக்கி-சிரியா எல்லைப் பிராந்தியம். இருட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார் சமர் யஸ்பெக். அதுவரை கம்பிகளுக்கடியில் படுத்தபடி ஊர்ந்து முன்னேற்றிக் கொண்டிருந்தார். துருக்கி வீரர்கள் கண்ணில் படாதவாறு எப்படியாவது சிரியாவுக்குள் போய்விட வேண்டும். கம்பிகள் முதுகில் சிராய்த்தால் உண்டான காயங்கள் கடுமையாக வலியைக் கொடுத்தன. பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இருட்டிவிட்டதை உறுதி செய்தவுடன் எழுந்து வேகமாக ஓடத் தொடங்கினார். தொலைவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அது கொடுத்த பதற்றத்தால், ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமானது.. ஒருவழியாக சிரியாவின் இத்லிப் (Idlib) பிராந்தியத்துக்குள் நுழைந்துவிட்டார் யஸ்பெக். சமீபத்தில்தான் இத்லிப்பை அரசுப் படைகளிடம் இருந்து போராளிகள் கைப்பற்றியிருந்தனர். அதனால் இனி கொஞ்சம் பயம் இன்றிச் செல்லலாம்.

எதற்காக உயிரைப் பணயம் வைத்து இந்தப் பயணம்? சமர் யஸ்பெக், சிரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். சிரியாவில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியின் போது அதில் கலந்து கொண்டவர். பஷீர் அல் அசாத் அரசுக்கெதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!