Home » எரியாத நாளில்லை – 11
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 11

11. பாத்

ஷிஷாக்லியின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு சிரியாவில் மீண்டும் தேர்தல் நடந்தது. எந்தக் கட்சியும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீண்டும் அட்டாசி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதும் ராணுவமே அரசைக் கட்டுப்படுத்தியது.

தேசியக் கட்சி, மக்கள் கட்சி போன்ற பழைய அமைப்புகள் அவையில் இடம் பெற்றிருந்தன. பாத் என்ற புதிய கட்சி இருபத்திரண்டு இடங்களைப் பெற்றிருந்தது. இனி சிரியாவை என்றென்றைக்கும் கட்டுப்படுத்தப் போகிற கட்சி அதுவென்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மிக்கேல் அல்ஃபாக், சலா அல்-பிட்டார் எனும் இரு நண்பர்களால் தொடங்கப்பட்டது பாத் கட்சி. ஃபிரான்ஸில் உயர்கல்வி கற்ற இருவருக்கும் நவீனக் கொள்கைகளில் இருந்த ஆர்வம் நட்பாக மாறியது. பிட்டார் ஒரு சுன்னி இஸ்லாமியர். அல்ஃபாக் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். இந்த முரண்பாடான ஒருங்கிணைவுதான் பாத் கட்சிக்கு நவீன வடிவத்தையும் கொள்கையையும் அளித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!