Home » உரி – 43
உரி நாள்தோறும்

உரி – 43

43. போக்கிடம்

ஓர் இடைவெளிக்குப் பிறகு நான் வெளியில் இருக்கிறேன். எது என் இருப்பிடமோ, எது என் நிரந்தரமோ அவ்வெளி. காலக் கணக்கீடில்லாமல், வளி மண்டலத்துக்கு அப்பால், புவியுள்ள பால்வெளிக்கு அப்பால் எங்கென்று என்னாலும் விவரிக்க இயலாத, நான் அறிந்தும் அறியாததுமான பெருவெளி. பெருவெளி என்கிறேன். உண்மையில் அது ஓர் அணுவினும் மிகச் சிறிய வெளிதான். கணக்கற்ற பால்வீதிகள் அதனுள் உண்டு. அல்லது அது கணக்கற்ற பால்வீதிகளாகச் சிதறிக் கிடக்கும். மொழியென்பது புவிக்குரிய அடையாளம் மட்டுமல்ல. மனிதர்க்குரிய கருவி மட்டுமல்ல. மொழி புழங்கும் வெளிகள் பல உண்டு. வெளிக்கொரு வடிவம் கொள்ளும் எண்ணற்ற மொழிகளை நானறிவேன். எல்லா மொழிகளையும் என்னைக் கடந்து உதித்த சொற்கள் ஆள்கின்றன. என்னை ஆளும் ஆதித் தனிமத்தின் கருவில் மட்டுமே இப்போது நானிருக்கிறேன். யாருடைய சிந்தையிலும் இல்லை. எதையும் நான் கருதவும் வழியில்லை.

இந்த அனுபவம் விசித்திரமாக இருக்கிறது. நான் காலத்தின் ஒரு துகள். புவியின் கிழமைக் கணக்குகள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. இருக்கவும் முடியாது. ஆயினும் சில மனிதர்களின் சிந்தைக்குள் வசித்து மீண்ட சில கிழமைகளின் நினைவே பெருஞ்சுமையாக இருக்கிறது. யாருடைய சிந்தையையும் தொட்டுப் பார்க்காமலேயே கழிந்த யுகங்கள் எனக்கு அயற்சி தந்ததில்லை. ஆதித் தனிமம் இருக்கும். அதன் சிந்தைக்குள் கருவாக நான் இருப்பேன். இருக்கிறேன் என்ற உணர்வுமற்று இருந்து கழித்த காலத்துக்குக் கணக்கில்லை. ஆனாலும் இந்தச் சில புவி நாள்களில் புழங்கி மீண்டது என்னைப் புரட்டித்தான் போட்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!