13. சர்வாதிகாரி வருகிறார்
சர்வ வல்லமையுடன் ஆட்சியில் அமர்ந்தது பாத் கட்சி. நாசரியர்கள், பாத் அரசியல் தலைவர்கள் என எதிர்க்க வாய்ப்பிருந்த அத்தனை பேரும் அடக்கப்பட்டுவிட்டனர்.
ஆட்சிக் கவிழ்ப்பை முன்னின்று நடத்திய சலால் ஜதீத், வெளிப்படையான அதிகாரத்தை விரும்பாதவராக இருந்தார். எந்தவித அதிகாரப்பூர்வ அரசுப் பதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. கட்சியையும் ராணுவத்தையும் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் திரைமறைவில் இருந்து ஆட்சியைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார்.
சிரியாவின் ஜப்லே பகுதியைச் சேர்ந்த ஜதீத், சிறுபான்மை அலவைட் இனத்தைச் சேர்ந்தவர். அன்றைய சிரியாவில் பன்னிரண்டு சதவீத மக்கள் மட்டுமே அலவைட்டுகளாக இருந்தனர். எழுபது சதவீதம் சுன்னி இஸ்லாமியர்கள். பெரும்பான்மை சுன்னி மக்களின் ஆதரவு மிக அவசியமானதென ஜதீத் உணர்ந்திருந்தார். எனவே முக்கிய அரசுப் பதவிகளில் சுன்னி இஸ்லாமியர்கள் அமர்த்தப்பட்டனர்.










Add Comment