45. இரண்டு துருவங்கள்
தஞ்சப்புரி நோக்கிச் சென்ற இட்டேறியில் இருவரும் நிதானமாக நடந்துகொண்டிருந்தார்கள். இடவையின் ஒரு புறம் கண்ணெட்டும் வெளியெல்லாம் நெல்லாடியது. பச்சை வண்ணத்தினுள்ளேயே எத்தனை எத்தனை விதமான பச்சைகள் என்று தத்தன் வியந்துகொண்டிருந்தான். முறுவல் செய்த சார்வாகன், மனிதர்களைப் போல என்று சொன்னான்.
ஆம். மனிதர்களைப் போலத்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொரு பதம்.
இல்லை தத்தனே. பதம் மாறுதலுக்குட்பட்டது. ஓடையில் இருக்கும்போது நீரின் பதம் ஒன்று. சட்டியில் ஏந்தி எடுத்து வந்து சுட வைத்தால் வேறு பதம். ஆவியாகும்போது முற்றிலும் இன்னொன்று.
சரியாகத்தான் சொல்கிறீர்கள் ஐயனே. மனிதனும் அப்படித்தானே? தருணத்துக்குத் தக்க விதமாகத்தானே நடந்துகொள்கிறான்?










Add Comment