Home » எரியாத நாளில்லை – 14
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 14

14. இரும்புத் திரை

ஜதீத் உடனான மோதலை ஏற்கெனவே உத்தேசித்திருந்தார் அசாத். அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியில் அமர்ந்த உடனேயே தொடங்கிவிட்டிருந்தார். ராணுவத்தின் மீது கொண்டிருந்த தன் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் அசாத். அவரை ஆதரித்தவர்களுக்கு உடனுக்குடன் உயர் பதவிகள் வழங்கப்பட்டன. மிக விரைவாகவே தனக்கான ஆதரவு வட்டத்தை வலுவாக உருவாக்கிக் கொண்டார்.

அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்ற அதீத நம்பிக்கையால் ஜதீத் இதையெல்லாம் கவனிக்கத் தவறினார்.

ஜோர்டான் தாக்குதலில் ஏற்பட்ட அவமானம் இருவருக்குமான பகையை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. அசாத்தின் ரகசிய நடவடிக்கைகளை மிகத் தாமதமாக உணர்ந்த ஜதீத், விரைவாக அசாத்தின் அதிகாரங்களைப் பிடுங்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். பாத் கட்சியின் முக்கியத் தலைகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்து, அசாத்தை நீக்குவது குறித்துப் பேசினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!