46. படுகுழி
சக்கரவர்த்தியின் அழைப்போலை ஓலை நாயகத்தார் சபையில் இருந்து வராமல், உத்தர மந்திரியின் சபையினைச் சேர்ந்த பெருந்தர அதிகாரி ஒருவர் மூலமாகக் கொடுத்தனுப்பப்பட்டிருந்ததை அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வியந்துகொண்டிருந்தார்கள்.
வழிப்போக்கனே, தெரிந்துகொள். ஆரியம் பாடுவாரினும்* நமது மன்னருக்குத் தேவாரம் இசைக்கும் பவனப்பிடாரரே முக்கியத்தர்,
என்று கூட்டத்தில் ஒருவன் சார்வாகனிடம் சொன்னான்.
ஓ, இது அருமையினும் அருமை என்று சார்வாகன் சொன்னான். அவனது முகத்தில் வெளிப்பட்ட வியப்பும் திகைப்பும் உண்மை போலவே இருந்தது. எனவே கூட்டத்தார் மேலும் உற்சாகம் கொண்டு பவனப்பிடாரரின் பெருமைகளை இன்னும் விவரிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் நானறிவேன். அவன் பவனப் பிடாரரைக் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதன் பொருட்டே அவர்களுடன் சல்லாபம் செய்துகொண்டிருந்தானே அன்றி, அவர் அடைந்த பெருமையோ, அவர்கள் குறிப்பிட்ட ஆரியம் பாடுவோர் அடையாத பெருமையோ அவனுக்கு ஒரு பொருட்டாக இல்லை.
தஞ்சப்புரிக்குச் செல்லும் இவர் எங்கே தாமதிக்க இருக்கிறார் என்று சார்வாகன் கேட்டான்.









Add Comment