17. வாரிசு அரசியல்
அசாத்துக்கு சோவியத் அரசு முழு ஆதரவு அளித்தது. ஆஃப்கனில் முஜாஹிதீன்களுக்கு எதிராக சோவியத் தொடுத்த போருக்கு நிகரானதாக ஹமா படுகொலைகள் நிகழ்வு பிரசாரம் செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக இப்படியான சம்பவங்களைத் தவிர்க்க முடியாதென அசாத்துடன் இணைந்து சோவியத்தும் பொய்ப் பிரச்சாரம் செய்தது.
அசாத் ஒன்றைக் கவனித்தார். பிற நாட்டின் எல்லைகளைத் தொடும்போதுதான் சிக்கல்கள் வருகிறதே தவிர, தன் நாட்டுக்குள் செய்யும் நாசகரச் செயல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. அசாத்துக்கு எதிராக இனி எந்தப் புரட்சியும் எழாது. அப்படி எழுந்தால் சகோதரர் ரிஃபாத்தின் தலைமையிலான ராணுவம் இருக்கிறது. பார்த்துக் கொள்ளலாம்.
துரதிர்ஷ்டவசமாக, சகோதரர் ரிஃபாத்தே அண்ணனுக்கு எதிராகத் திரும்பினார். ஹமா படுகொலைகள் நிகழ்ந்த அடுத்த ஆண்டு அசாத்துக்கு உடல்நிலை மோசமானது. வழக்கமான பணிகளைச் செய்ய முடியாத அளவுக்குப் படுக்கையில் வீழ்ந்தார்.










Add Comment