Home » உரி – 49
உரி நாள்தோறும்

உரி – 49

49. காக்கைப் போர்

இருட்டத் தொடங்குவதற்கு இரண்டு நாழிகைக்கு முன்பிருந்தே வானில் சஞ்சலைகள்* ஒளிர்ந்து உதிர்ந்ததைக் கண்டு சார்வாகன் வியப்புற்றான். இதென்ன, காலமில்லாக் காலத்தில் இப்படி ஒளிர்கிறது என்று சொன்னான். தஞ்சப்புரி நோக்கிச் செல்லும் சாலையில் அவர்கள் நெடுந்தொலைவு கடந்துவிட்டிருந்தார்கள். தத்தனின் முகத்தில் சோர்வு அழுத்தமாகவே தென்பட்டது.

ஐயனே, நாம் சிறிது இளைப்பாறலாமா என்று கேட்டான்.

இன்னும் சிறிது நேரத்தில் முற்றிலும் இருட்டிவிடும் தத்தா. அதற்கு முன்பு ஏதேனுமொரு சத்திரத்தை அடைந்துவிட்டால் உண்டு ஓய்வு கொள்ள வசதியாக இருக்கும். இப்போது நாம் தாமதித்தால் பிறகு இன்னும் சிரமமாகும் என்று சார்வாகன் சொன்னான்.

அவன் சொன்னதை ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்த தத்தன்,

என்னால்தான் இத்தாமதம் நேர்ந்தது. நாம் நேரே இந்தப் பக்கம் வந்திருக்கலாம். கட்டாயம் செய்து உங்களைக் குடந்தை நோக்கி இழுத்துச் சென்றுவிட்டேன்,

என்று சொன்னான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!