அத்தியாயம் 20
கிட்டத்தட்ட அனைத்து விவாத மன்றங்களும் தடை செய்யப்பட்டன. புதிதாக எதுவும் உருவாதவாறு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக நாடுகளின் மௌனம் கவலை அளித்தது. சக அரேபிய நாடுகளிடமிருந்து எந்தக் குரலும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் பெயருக்குக் கண்டனங்களைப் பதிவு செய்தன.
அசாத்தால் கைது செய்யப்படலாம் எனப் பயந்த பலர், சிரியாவை விட்டுத் தப்பிச் சென்றனர். அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சென்று தங்கியிருந்து, அசாத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினர். ஆனால் அவை பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கவில்லை.










Add Comment