Home » எரியாத நாளில்லை – 21
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 21

21. அரபு வசந்தம்

அந்தச் சாலையோர வியாபாரி தற்கொலை செய்து கொண்டான், அதனால் அரபு வசந்தம் தொடங்கியது எனப் பொதுவாகச் சொல்லலாம். ஆனால் அதற்கு முன் பல வருடங்களாகவே அரேபிய மக்கள் உழன்று கொண்டிருந்தனர். பிரஜைகள் என்றொரு உயிரினம் இருப்பதே அந்தப் பிராந்தியத்திலிருந்த அரசுகளுக்குத் தெரிவதாக இல்லை.

‘ஆள்கிறேன் என்கிறார்கள், நாட்டைக் காக்கிறேன் எனச் சத்தியம் செய்கிறார்கள். ஆனால் தசாப்தங்கள் கடந்தாலும் நாற்காலியை விட்டு நகராமல் சர்வாதிகாரம் செய்கிறார்கள். சரியான வேலைவாய்ப்புகள் இல்லை. விலைவாசியும் ஒருபக்கம் கம்பளத்தில் உயரப் பறக்கிறது. ஏன் இப்படி என எதிர்த்துக் கேள்வி கேட்டால் உடனே சிறைக்குள் தள்ளப் படுகிறோம்.’

பெரும்பாலான அரேபிய மக்கள் அன்றைக்கு இப்படித்தான் மனத்துக்குள் அழுது கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட வெடித்துக் கிளம்பக் காத்திருந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!