24. அல்-நுஸ்ரா உதித்தது
அல்-கொய்தாவின் இராக் கிளை, ஐ.எஸ்.ஐ (Islamic State of Iraq) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. இராக்கின் பாக்தாத், தியாலா, நிவியா போன்ற பிராந்தியங்களைக் கைப்பற்றியிருந்தது.
ஜர்க்காவி கொல்லப்பட்ட பிறகு, அபு பக்கர் அல்-பாக்தாதியின் தலைமைக்குக் கீழ் வந்தது ஐ.எஸ்.ஐ. சிரியாவில் இருக்கும் குழப்பநிலையை உபயோகப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார் பாக்தாதி. இராக்கைத் தாண்டி தன் எல்லைகளை விரித்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. சுன்னி இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் அசாத்தையும் உடனடியாக வீழ்த்த வேண்டும்.
எனவே முக்கியமான சில போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்குத் தலைமை ஏற்றிருந்த போராளியின் பெயர் அபு மொஹ்மத் அல்-ஜுலானி. இன்றைய சிரியாவின் அதிபர். உண்மையான பெயர் அஹ்மத் அல்-ஷரா.
சிரியாவின் கோலன் பகுதியைச் சேர்ந்தவர் ஜுலானி. இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தார். தன் செயல்பாடுகள் மூலம் தலைமையின் கவனத்தை விரைவாக ஈர்த்தார்.










Add Comment