Home » உரி – 56
உரி நாள்தோறும்

உரி – 56

56. கண்டேன்

புலர்வது போலச் சத்தமின்றி உதுமானி நாயனார் குகைக்குள் தோன்றி அமர்ந்தார். ஒரு களாசக் கூடையில் சோறும் ரசமும் திற்றி வகைகளும் எடுத்து வந்திருந்தார். அவற்றைச் சத்தமின்றி எடுத்து வெளியே வைத்தார். சில பழங்களையும் எடுத்து வைத்துவிட்டு, குடிநீர் இருந்த மண் பாண்டத்தை நகர்த்தி அருகே வைத்தார். பிறகு அவன் உறங்கி விழிப்பதற்காகக் காத்திருக்கத் தொடங்கினார். அவரது பார்வை, சார்வாகனின் மீதே இருந்தது. அதில் பரிவு இருந்தது. எதைச் சொன்னாலும் அவன் ஏற்க மறுப்பது குறித்த கவலை அவருக்கு இருக்கலாம். ஆனால் அவனை மாற்றுவது அவரது நோக்கமாக இருக்க இயலாது. அவன் தஞ்சப்புரிக்குச் செல்லக்கூடாது. சென்றால் விபரீதம் நிகழும். அதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால் அவர் அதில் ஐயமின்றி வென்றிருந்தார்.

நானறிவேன். சார்வாகனுக்கு உடல் வலு உண்டு. பல்லாண்டுக் காலமாகத் தழைத்து நிற்கும் ஒரு தருவையும் அவனால் முறித்துத் தள்ள முடியும். எத்தனைக் கொடிய மிருகங்களாயினும் அஞ்சாமல் எதிர்த்து நின்று சமரிட முடியும். மிருகங்களை அஞ்சாதவன் மனிதர்களுக்கா யோசிப்பான்? அவனுக்குள் வந்து செல்லும் மாய மனிதர்கள் துணிவிருந்தால் நேரே வந்து அவனுடன் மோதிப் பார்க்கலாம். நிச்சயமாகவே சொல்வேன், மிகச் சில நிமிடங்களில் அவன் கொன்றுவிடுவான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!