29. விடைபெறுகிறேன் சிரியாவே!
2011 முதல் பன்னிரண்டு ஆண்டுகளாக நடந்த போர்களால் சிரியாவும் அதன் மக்களும் சுக்குநூறாகிப் போயிருந்தனர். அடுத்து எப்படி வாழப் போகிறோம் என்றே பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தேசத்தின் பாதி மக்கள் தொகை அகதிகளாகியிருந்தது.
இப்படியான நிலையில் இயற்கையும் கூட அவர்களை வதைக்க முடிவெடுத்தது. 2023 பிப்ரவரியில் சிரியாவையும் துருக்கியையும் மிகப் பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியது. சிரியாவில் எட்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். துருக்கியில் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அங்கு ஐம்பதாயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவில் மீதமிருந்த கட்டடங்களும் இந்தப் பூகம்பத்தில் தரைமட்டமாகின. விளைவாக, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.
மீட்பு நடவடிக்கைகள் மிக மோசமான நிலையில் நிகழ்ந்தன. ஆஸ்தான ராணுவத்துக்கே நிதியற்ற நிலையில், மீட்பு நடவடிக்கைகளைச் செய்வதற்கெல்லாம் அசாத்தின் அரசால் இயலவில்லை.











Add Comment