30. புதிய சிரியா: நிஜமான விடியல்?
2025 ஜனவரியில் HTS தலைமையிலான சிரியப் புரட்சி வெற்றி மாநாடு நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சிரியாவின் இடைக்கால அதிபராக ஜுலானி என்ற அஹ்மத் அல்-ஷரா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012இல் அசாத்தால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தைத் தகுதிநீக்கம் செய்தார் அல்-ஷரா. அதற்குப் பதிலாகப் புதிய அரசியலமைப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.
2030ஆம் ஆண்டு ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பு சிரியாவில் நடத்தப்படும் என்றது இடைக்கால அரசு. அதுவரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அல்-ஷரா அதிபராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.
சுன்னி இன ஆதிக்க அரசாக இது இருக்குமென்ற மக்களின் சந்தேகத்தைக் களைந்தார் அல்-ஷரா. அவரது புதிய அமைச்சரவையில் கிறிஸ்துவர்கள், அலவைட்கள், த்ரூஸ், குர்த் என அனைத்துச் சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் இருந்தது. மொத்தமிருந்த இருபத்தி மூன்று அமைச்சர்களில் பெண் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.









Add Comment