சமீப நாட்களாக இக ஒருவிதமான அவஸ்தையில் இருந்ததை அவனது திருமதியானவள் கவனிக்கத் தவறவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வானத்தை வெறிப்பான். கவனம் எங்கோ உறைந்து நிற்க, “ம்.. என்ன சொன்னே..?” என்று வழக்கத்தைவிட அதிகமாக ‘ழே’யென்று விழிப்பான். அன்றைய தினத்தின் காலையில் அவன் வானத்தை நோக்கி விரல் நீட்டி ஒன்று, இரண்டு என்று எண்ணுவது போல விரல்காட்ட ஆரம்பித்ததும் அவள் தீர்மானமே செய்துவிட்டாள்.
“என்னங்க… ஸம்திங் ராங். கம் வித் மீ… நீங்க உடனே டாக்டரைப் பாத்தாகணும்…”
அவள் பக்கம் திரும்பினான். வினோதமாக ஒரு புன்னகை செய்தான். “டாக்டரைப் பாக்க வேண்டாம் டியர். குருநாதரைப் பாத்தாகணும் நான்…”
“வாட்..? என்ன குருநாதர்..?”
“நான் இனிமே தினமும் தியானம் செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன்…”
“என்ன திடீர்ன்னு தியானம், அது இதுன்னு…” சந்தேகாபஸ்தமாக அவன் முகத்தை ஊடுருவினாள். “உங்களுக்குத் தாடிகூட இல்லையே…”
“அனாவசியமா அரசியல் பேசாத. நான் மண்டபத்துலயோ, கல்லறையிலயோ தியானம் பண்ணப் போறதில்ல. வீட்லதான்…”
“அதான், திடீர்ன்னு ஏன்னு கேக்கறேன்…”
Add Comment