Home » ஒரு திடீர் பிரதமர்
உலகம்

ஒரு திடீர் பிரதமர்

லிதுவேனியாவின் பாராளுமன்றம் இங்கா ருகினீனேவை தங்கள் நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. 2024ஆம் ஆண்டில் பதவியேற்றிருந்த கின்டோடஸ் பலுடிஸ்கஸ் தலைமையிலான அரசு, நிதி மோசடிக் குற்றங்களால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பதவி விலகியது. கடந்த செவ்வாய்க்கிழமை அடுத்த பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் முந்தைய அரசின் சமூகம் மற்றும் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த இங்கா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்குச் சாதகமாக எழுபத்தெட்டு வாக்குகளும், எதிராக முப்பத்தைந்து வாக்குகளும் பதிவாகின.

இந்த ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். புதியதாகச் சேர்ந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ரஷ்ய ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தும் அவர்கள் பதாகைகளை வைத்திருந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!