இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி கற்கும் மாணவர்களில் அனேகமானோரின் கனவு ஏதாவது ஒரு ஐஐடி காலேஜில் படிக்க வேண்டும் என்பதே. அதற்கான தேர்வுப் பரீட்சைகளுக்குத் தயாராகப் பல வருடங்களாகப் பெற்றோரும் மாணவர்களும் உழைக்கிறார்கள். ஐஐடி எனும் பிராண்ட் இந்தியாவில் மட்டுமல்ல… உலகெங்கும் மதிப்புக்குரிய ஒரு பிராண்ட். தரமான பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு கல்வி நிலையமாகவே ஐஐடி மேற்குலக நாடுகளில் பார்க்கப்படுகிறது. ஐஐடி மாணவர்களில் பலர் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் நட்சத்திரங்களாகத் திகழ்கிறார்கள். சென்னையில் உள்ள ஐஐடி, இந்தியாவிலுள்ள ஆரம்ப கால ஐஐடி கல்லூரிகளில் ஒன்றாகும்.
ஸன்ஸிபார் உலகளவில் மசாலாப் பொருட்களுக்கும் சுற்றுலாவிற்கும் பிரபலமானது. இந்து சமுத்திரத்தில் உள்ள பல தீவுகள் அடங்கிய ஒரு தீவுக் கூட்டமே ஸன்ஸிபார் என அழைக்கப்படுகிறது. இதில் ஸன்ஸிபார் எனும் நகரமும் உண்டு. இத்தீவுக்கூட்டம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியா நாட்டின் ஒரு மாநிலமாகும். இந்த ஸன்ஸிபாருக்கும் சென்னைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர்கள் இடைவெளி. ஆனாலும் இவற்றுக்கிடையே ஒரு புதிய தொடர்பு உருவாகிறது.
Add Comment