Home » குழாய்க்குள் போகும் ரயில்
இன்குபேட்டர்

குழாய்க்குள் போகும் ரயில்

தற்போதைய போக்குவரத்து வகைகளில் அதிவேகமாகச் செல்லக் கூடியது விமானப் பயணம். அதற்கடுத்ததாக அதிவேக ரயில் பயணங்கள். அதற்கடுத்ததாக நெடுஞ்சாலைகளில் செய்யக்கூடிய கார் பயணங்கள். விமானத்தின் வேகத்தில் தரைமூலம் பயணம் செய்யக் கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு நகரத்திலிருந்து இன்னுமொரு நகரத்திற்கு மணிக்கணக்காக ரயிலில் பயணம் செய்வதற்குப் பதிலாகச் சில நிமிடங்களில் செல்ல முடியுமா? இப்படியான கேள்விகளுக்குப் பதிலாக 2013 ஆம் ஆண்டில் ஈலோன் மஸ்க் ஒரு யோசனையை முன் வைத்தார். அதுதான் ஹைப்பர்லூப் எனப்படும் போக்குவரத்து முறை. யோசனையை முன்வைத்தாலும் யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தித் தொழில் நுட்பங்களை உருவாக்கலாம் என்றும் ஈலோன் மஸ்க் சொன்னார்.

இதன் விளைவாக ஹைப்பர்லூப் யோசனையைச் செயல்முறையில் பயன்படுத்தக் கூடியதாக உருவாக்கும் நிறுவனங்கள் சில உருவாகின. அத்துடன் பல நாடுகளிலும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து முறையினை எப்படிச் செயல் முறையில் உருவாக்கலாம் என ஆய்வில் ஈடுபட்டனர்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் எப்படி இயங்கும் என முதலில் பார்ப்போம். தரையில் சில்லுகளில் இயங்கும் ரயில் போன்றவற்றால் அதிவேகமாகப் போக முடியாது. ஆகவே அதிவேகமாக, விமானத்தின் வேகத்தை எட்டக் கூடியதாகப் போக வேண்டுமாயின் அவ்வாகனம் காற்றில் மிதந்து செல்ல வேண்டும். காற்றின் அழுத்தம் குறைக்கப்பட்ட ஒரு பிரத்தியேகக் குழாயில் காந்த சக்தியைக் கொண்டு வேகமாக ஒரு வாகனத்தினை இயக்கலாம். அதாவது ஒரு குழாயினூடாகக் குழாயின் மேற்பரப்புகள் எதிலும் தொடாமல் வேகமாகப் பயணம் செய்யக் கூடிய வாகனம். இதுவே இந்த ஹைப்பர்லூப்பின் அடிப்படை அறிவியல் தத்துவம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்