Home » நிலவுச் சுற்றுலா
இன்குபேட்டர்

நிலவுச் சுற்றுலா

சிறு குழந்தையோ பெரியவரோ வயது வித்தியாசம் இல்லாமல் பயணம் செய்வதென்றால் உற்சாகமடையாதோர் இல்லை என்றே சொல்லலாம். பயணங்கள் பல வகைப்படும். ஊரிலுள்ள கோயில் திருவிழாக்கள், உறவினர்கள் நண்பர்களின் வீட்டு விசேஷங்கள், உறவினர்களைப் போய்ப் பார்த்தல் போன்ற காரணங்களுக்காகச் செய்யும் அத்தியாவசியப் பயணங்கள், புண்ணிய தலங்களைத் தரிசிக்கச் செல்லும் ஆன்மீகப் பயணங்கள், இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் சக்தி சேர்க்கும் வகையான சுற்றுலாப் பயணங்கள், உலகில் வேறு கலாசாரங்களைக் கண்டும் பார்த்தும் உண்டும் அனுபவிக்கச் செல்லும் சுற்றுலாக்கள், சாகசப் பயணங்கள் என்று பலவகையான பயணங்களை உலகெங்கும் மக்கள் தினமும் மேற்கொள்கிறார்கள்.

பயணத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு மக்கள் அந்நிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இன்றைய காலத்தில் பூமியின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்துக்குச் செல்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. பூமியைச் சுற்றிப் பார்ப்பது சுலபமானால் அத்துடன் நிறுத்தி விட முடியுமா? விண்வெளிக்குப் போக வேண்டாமா? நட்சத்திரங்கள் போல் நமது கண்ணுக்குத் தெரியும் மற்றைய கிரகங்களுக்குப் போய்ப் பார்க்க வேண்டாமா? போன்ற கேள்விகளால் உந்தப்பட்ட மனிதகுலம் நிலவில் காலடி எடுத்து வைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது.

சுற்றுலாப் பயணங்களில் தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் துறை விண்வெளிச் சுற்றுலாத் துறையாகும். நிலவில் ஆம்ஸ்ட்ரோங் எனும் விண்வெளி வீரர் கால் பதித்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆன போதிலும் சாதாரணச் சுற்றுலாப் பயணிகளை நிலவுக்குக் கொண்டு போகுமளவு தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் வரவில்லை. ஆனாலும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அல்லது பூமியின் காந்த சக்தியிலிருந்து விடுபட்டு எடையற்ற உணர்வைக் கொடுக்கக் கூடியளவு விண்வெளிக்குப் பயணம் செய்யும் தொழில்நுட்பம் அண்மைக் காலங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

விண்வெளி நிலையத்துக்கு முதலாவதாகச் சென்றவர் டெனிஸ் டிட்டோ எனும் தொழிலதிபர். இருபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து விண்வெளி நிலையத்துக்குப் போகும் சலுகையைப் பெற்றார். கடுமையான பயிற்சியின் பின்னர் 2001 ஆம் ஆண்டில் இவர் விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆறு நாள்கள் தங்கினார். பணம் கொடுத்துச் சென்றாலும் கடும் பயிற்சிகளுக்குப் பின்னர் சென்றதால் தன்னை ஒரு விண்வெளிச் சுற்றுலாப் பயணி என்று சொல்வதை அவர் விரும்பவில்லையாம் என்பது உபரித்தகவல். இவரைத் தொடர்ந்து சிலர் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!