Home » பறக்கும் கார்!
இன்குபேட்டர்

பறக்கும் கார்!

உலகில் நடைபெறும் தொழில்நுட்பக் காட்சிகளில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் சி.இ.எஸ். (CES) முக்கியமானதொன்றாகும். இத்தொழில்நுட்பக் காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் புதிய ஆக்கங்களின் முன்மாதிரிகளை (Prototypes) காட்சிப்படுத்துவார்கள். 2023-இல் அஸ்கா (ASKA) நிறுவனம் அவர்களது பறக்கும் காருக்கான முன்மாதிரியினைக் காட்சிப்படுத்தினார்கள். இந்நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனம்.

இம்முன்மாதிரி VTOL வகையைச் சேர்ந்தது. VTOL என்பது Vertical Take Off and Landing எனப்படும் ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமாகும். அதாவது ஓரிடத்தில் நின்றபடியே செங்குத்தாக மேலே செல்லக் கூடியதும் அதே போல செங்குத்தாக கீழே இறங்கக் கூடியதுமான வாகனம். பொதுவாக விமானங்கள் ரன்வேயில் சிறிது தூரம் ஓடிய பின்னரே பறக்கத் தொடங்கும். ஆனால் ஹெலிகாப்டர்கள் நின்ற இடத்திலேயே செங்குத்தாக மேலே போகக் கூடியவை. இந்நிறுவனம் தமது படைப்புக்கு eVTOL வாகனமாக அனுமதி பெறுவதற்கான முயற்சிகளில் உள்ளனர். இதில் வரும் முதல் எழுத்தான e என்பது மின்சாரத்தில் இயங்கும் வாகனம் என்பதைக் குறிப்பிடுவதாகும். ஆனாலும் இவ்வாகனத்தை அவர்கள் ஹைப்ரிட் என்றே குறிப்பிடுகிறார்கள். காரணம் பாட்டரிகளில் இவ்வாகனம் இயங்கினாலும். தேவைப்படின் பறக்கும் தூரத்தைக் கூட்டுவதற்காக பறந்து கொண்டிருக்கும் போதே பாட்டரிகளை சார்ஜ் பண்ணக் கூடிய இயந்திரமும் இணைக்கப் பட்டுள்ளது. இதற்கான எரிபொருள் பொதுவாக எரிபொருள் விற்கும் நிலையங்களில் கிடைக்கக் கூடிய வகை என்றும் அவர்களது இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் சொல்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!