2016ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்புத் திட்டத்தை அறிவித்தார். அதனால் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாமல் போயின. நாட்டில் புழக்கத்தில் இருந்த நாணயத்தில் எண்பது சதவீதம் ரத்தானது. அதற்கு அரசுத் தரப்பில் கறுப்புப் பணம் ஒழிப்பு, போலி நோட்டு அகற்றம், பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியை நிறுத்துதல் போன்ற காரணங்களைப் பட்டியலிட்டனர்.
ஆனால் செல்லாமல் போன நோட்டுகளில் 99.3% திரும்பவும் ரிசர்வ் வங்கிக்கு வந்து சேர்ந்தன. கறுப்புப் பண ஒழிப்பின் நோக்கம் கேலிக்கூத்தானது. பண மதிப்பிழப்பு நடந்த ஆண்டில் மட்டும் ஆறரை லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்தொன்பது லட்சம் கள்ள நோட்டுகள் பிடிபட்டன. மற்றபடி நாட்டில் எல்லாம் சரியாக நடப்பதாகவே சொல்லப்பட்டது, ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம் சுருங்கியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் செயல்படுத்த அரசுக்கும் RBIக்கும் சேர்த்து சுமார் பதினேழாயிரம் கோடி ரூபாய் செலவானது.















Add Comment