சர்வதேச நாணய நிதியத்தின் 2025 ஏப்ரல் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 4.51 டிரில்லியன் டாலராகவும், ஜப்பானுடையது 4.46 டிரில்லியன் டாலராகவும் இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.
இது எப்படிச் சாத்தியமானது?
2022இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிட்டனை விஞ்சி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியபோதே இந்த வளர்ச்சி தொடங்கிவிட்டது. உலக வங்கியின் தரவுகளின்படி, 2024இல் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,694 டாலராக இருந்தபோது, ஜப்பானுடையது 32,487 டாலராகவும், ஜெர்மனியுடையது 56,103 டாலராகவும் இருந்தது.














Add Comment