Home » அமைதிக்கு மட்டுமே ஆதரவு
உலகம்

அமைதிக்கு மட்டுமே ஆதரவு

காஷ்மீரை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இரண்டும் எப்போதும் போர் முனைப்பிலேயே இருந்து வருகின்றன. விடுதலை அடைந்து கிட்டத்தட்ட எழுபத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்பும் முழுமையான அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கின்றது. குறிப்பாக காஷ்மீரிலும் எல்லையை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் இருக்கும் இரு நாட்டின் அப்பாவி பொதுமக்களை இந்நிலை பெரும் ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானிலிருந்து ஒரு காணொளி இணையத்தில் அதிவேகமாகப் பரவியது. அதில் இசுலாமபாத் லால் மஸ்ஜித்தின் மதகுரு இமாம் மௌலானா அப்துல் அஸிஸ் காஸி என்பார் தொழுகைக்கு கூடியிருக்கும் மக்களிடம் இப்படிக் கேட்கிறார். “உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டால் எத்தனை பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போர் செய்வீர்கள்?”. ஒரு சில கைகள் மட்டுமே உயர்த்தப்பட்டன என்பது பெரும் பேசுபொருளானது. அதே காணொளியில் அவர் தன்நாட்டின் மீதே கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார். இந்தியாவை விடவும் பாகிஸ்தானில் இசுலாமியர்கள் மிகக் கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

அதே போல் மற்றொரு காணொளியில் வடமேற்கில் இருக்கும் பஷ்டூன் இன மக்களின் மதகுரு ஒருவர் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டுமென பலரும் இறைவனிடம் வேண்டியதாகக் கூறுகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!