மாறிக்கொண்டே இருக்கும் உலக அரசியல் அரங்கில் மாறாத ஒன்று இந்திய ரஷ்ய நட்பு. இதைச் சொன்னது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 2023 டிசம்பர் மாதத்தில் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார். டிரம்ப் போட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவு அந்த உறவை அசைத்துவிடுமா என்ன?
15ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு கதைகளுக்குப் போகவேண்டாம். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து பார்த்தாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு வலுவாக இருக்கிறது என்பது உண்மைதான். இந்தியா, பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கலை ஐநா மன்றத்தின் முன்பு எடுத்துச் சென்றது இந்தியா. அப்போது சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யா, இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. 1957, 1962, 1971ஆம் ஆண்டுகளில் தன் வீட்டோ அதிகாரத்தை இந்தியாவுக்கு ஆதரவாகப் பயன்படுத்தியது.
அதிலும் 1971ஆம் ஆண்டு பங்களாதேஷுக்காக இந்தியா நடத்திய போரில் தன் போர்க்கப்பல்களை அனுப்பி உறுதியாகத் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது. நட்புறவு ஒப்பந்தமும் செய்துகொண்டது. அண்மைக்காலம் வரை கூட ரஷ்யா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. காஷ்மீரில் ஆர்டிகிள் 370 நீக்கம் செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஐநாவில் இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கியது.















Add Comment