நான் பத்தாவது படிக்கும்போது திருநெல்வேலியில் கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் புதுவீடு கட்டிக் குடியேறினோம். அந்தப் பகுதியில் அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. எங்கள் பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பது வீடுகள் வந்த பிறகு ஒரு அம்மா காய்கறி விற்க எங்கள் பகுதிக்குத் தினமும் வருவார்.
அவர் கொண்டு வரும் காய்கறிகள் எல்லாம் அருமையாக இருக்கும். ஒரு சொத்தைக் கத்திரிக்காய்கூட இருக்காது. ஒரு முற்றல் வெண்டைக்காய் கூட இருக்காது. ஒரு நாளைக்கு ஒரு காய்கறிதான் கொண்டு வருவார். அன்று அவர் கொண்டு வந்தது வாழைப்பூ என்றால் அன்று கிருஷ்ணா நகர் முழுக்க வாழைப்பூ வாசம்தான் இருக்கும். வாழைப்பூப் பொரியல், வாழைப்பூக் கூட்டு வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை என்று எங்கள் நகரே வாழைப்பூ நகராக மாறி நிற்கும். அடுத்த நாள் கீரை நகர். அதற்கு அடுத்தநாள் அவரை நகர் என்று அவர் கொண்டு வரும் காய்கறியைப் பொறுத்தே அன்று என்ன சமையல் என்பதை எங்கள் நகரவாசிகள் முடிவு செய்வார்கள்.
எங்கள் நகரின் ஒவ்வொரு வீட்டின் செங்கலிலும் இந்தப் பழக்கம் செங்கல்வெட்டாக பதிந்து விட்டது. என்றாவது ஒருநாள் அவர் வரவில்லையென்றால் நகர் மக்கள் தயிர் சாதம் சாப்பிடுவார்களே ஒழிய வேறு ஒருவரிடம் காய்கறி வாங்கிச் சாப்பிட மாட்டார்கள்.
Irrational behaviour of consumers என்று ஒரு தியரி உண்டு அதற்கு ஆப்பிள்,பட்டுப்புடவை என பாகுபாடு கிடையாது! கணவர் பாவம் விட்டு விடுங்க!
விஸ்வநாதன்