ஜூன் 13 ஆம் தேதி அதிகாலையில் இரானின் பல இடங்களில் இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வெளியுறவு அமைச்சக கட்டிடமும், இஸ்ஃபஹானில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவத் தளமும் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்தத் தாக்குதல்களை ஆப்ரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஜூன் 13ஆம் தேதி மாலை இஸ்ரேல் மீதான பதில் தாக்குதலை இரான் அரங்கேற்றியது. இஸ்ரேலின் புனித நகரமான ஜெருசலேம் மற்றும் அதன் ராணுவ நிலையங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலியப் பகுதியில் உள்ள அமெரிக்க வசிப்பிடங்களும் அதன் எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் பாதைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின.
ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA (International Atomic Energy Agency) தனது செயற்கைக்கோள் படப் பகுப்பாய்வின்படி இஸ்ரேலின் தாக்குதலில் இரானின் நிலத்தடி செறிவூட்டல் நிலையங்கள் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன் மூலம் அணுக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஆரம்பித்ததிலிருந்து 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இரானின் அண்டை நாடான அசர்பைஜானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.















Add Comment