Home » இன்னொரு யுத்தம்: தாங்குமா மத்தியக் கிழக்கு?
உலகம்

இன்னொரு யுத்தம்: தாங்குமா மத்தியக் கிழக்கு?

மத்தியக் கிழக்கில் போர் மேகங்கள் வலுத்திருக்கின்றன. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காஸா, சிரியா, லெபனான் போன்ற இரான் ஆதரவுப் பிராந்தியங்களின் மேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல், இப்போது நேரடியாக இரான் மீதே தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

2023 அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, இப்போது வரை காஸாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தப் போரில் இதுவரை சுமார் 54,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். பாலஸ்தீனத்தில் வசிக்கும் மக்களில் ஏறக்குறைய எழுபது சதவீதத்தினர், சொந்த நாட்டில் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதோடு, இரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளான ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இரான் உதவுவதைத் தடுத்து நிறுத்த இஸ்ரேல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹமாஸ் உடனான இருபது மாதப் போரில் அந்த இயக்கத்தைக் கிட்டத்தட்டத் தரைமட்டமாக்கிவிட்டது. அதன் முக்கியமான கமாண்டர்களும், தலைவர்களும் அடுத்தடுத்து இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!