பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இந்தப் புதிய பிரிவுக்கான ஆள் சேர்ப்புப் பணிகள் பஹவல்பூரில் அக்டோபர் 8 அன்று தொடங்கியுள்ளன.
இந்தப் பெண்கள் பிரிவுக்கு மசூத் அசாரின் சகோதரி சாதீயா அசார் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையின் ஒருபகுதியாக, மர்கஸ் சுபானல்லாவில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தைத் தாக்கியது. இத்தாக்குதலில் சாதீயா அசாரின் கணவர் யூசுப் அசார் உள்படக் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கத்தில் அவர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
1994ஆம் ஆண்டு போலி ஆவணங்களுடன் காஷ்மீருக்குள் நுழைந்ததாக மசூத் அசாரை இந்தியப் படைகள் கைது செய்தன. பின் 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814 கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பணயக் கைதிகள் பரிமாற்றத்தில் இந்திய அரசாங்கம் மசூத்தை விடுவித்தது. 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மசூத் அசார் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைத் தொடங்கினார். இதன் பொருள் முகமதுவின் ராணுவம் (Army of Prophet Muhammad) என்பதாகும்.














Add Comment