Home » அரிசிப் பேச்சால் வேலை போச்சு!
உலகம்

அரிசிப் பேச்சால் வேலை போச்சு!

என் கழகக் கண்மணிகள் போதுமான அளவு அரிசி மூட்டைகளை அன்பளிப்பாக அளித்து வருகின்றனர். அப்படியிருக்க நான் ஏன் காசு கொடுத்து அரிசி வாங்க வேண்டும் என்று சுய தம்பட்டம் அடித்திருக்கிறார் ஜப்பானின் வேளாண்துறை அமைச்சர் டாக்கு எட்டோ. இக்கருத்தால் தனது பதவி பறி போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஜப்பானில் அரிசி பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட விலை இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது. டாக்கு எட்டோவின் கருத்தால் மக்கள் கடும் சீற்றமடைந்தனர். எதிர்க் கட்சிகளும் கடுமையாக வசை பாடின. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக மிரட்டினர். இவற்றின் காரணமாக, டாக்கு எட்டோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1918 இல் அரிசி விலை உயர்வைக் கண்டித்து ஜப்பான் அரசு கவிழ்ந்து இருக்கிறது. ஜப்பானின் தற்போதைய அரிசி பற்றாக்குறைக்கு 2023 இல் நிலவிய கடும் வெப்பம் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அறுவடைக் காலம் முடிந்ததும், உலர்ந்த நெல், அரிசி ஆலைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. அதன் பின் அது படிப்படியாக வினியோகம் செய்யப்படுகின்றது. இந்தச் செயல்முறையின் தாமதத்தால் அரிசிக்கான தேவை அதிகரித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!