2025ஆம் ஆண்டில் எழுத்து சார்ந்து அடைய வேண்டியவை என்று சில இலக்குகளைச் சென்ற ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
1. இரண்டு அல்புனைவுப் புத்தகங்கள்
2. ஒரு நாவல்
3. சில சிறு கதைகள்
4. சென்ற ஆண்டு ஆரம்பித்த சிறுகதைத் தொகுப்பு வேலைகளை முடித்தல்
5. நிறையவே வாசித்தல்.
இவற்றை அடைந்தேனா என்று பார்ப்போம்.
‘எனதன்பே, எருமை மாடே!’ எனும் தொடர் சென்ற ஆண்டின் இறுதியில் மெட்ராஸ் பேப்பரில் ஆரம்பித்தேன். இந்த ஆண்டில் இருபது அத்தியாயங்களுடன் அது முடிவுக்கு வந்தது. வாராவாரம் இதழில் வரும் தொடரைப் புத்தக வடிவில் கொண்டு வருவதாயின் சில மாற்றங்களும் எடிட்டிங்கும் செய்ய வேண்டும். ஆனால் எனக்கு அதற்கான நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்தத் தொடரை விட வேறு கட்டுரைகள் பலவற்றை மெட்ராஸ் பேப்பரில் எழுதி இருந்தேன். ஆனாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தனிக்கட்டுரைகள். அதனால் அவற்றை ஒரு புத்தக வரவில் கொண்டு வர முடியாது. நிறையவே எழுதிய போதிலும் அல்புனைவுப் புத்தகம் என்று ஒன்றுகூட உருவாக்கவில்லை.














Add Comment