“எனக்குச் சின்ன வயசா இருந்தப்ப எங்க வீட்டு டீ.விக்கெல்லாம் ரிமோட்டே கெடையாது பாப்பா” என்று எனது பத்து வயது மகளிடம் கூறினேன். அவள் சற்றும் யோசிக்காமல் “ஏம்ப்பா… தொலச்சிட்டியா?” எனக் கேட்டாள்.
ரிமோட் இல்லாமல்தான் நாம் தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு காலத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். அதுசரி…. இருந்தது ஒரே ஒரு தூர்தர்ஷன் சேனல். அதுவும் தடங்கலுக்கு வருந்தாத நேரத்தில் நமக்கு வயலையும் வாழ்வையும் காட்டிக் கொண்டிருந்தது. அதற்கெதற்கு ரிமோட் என்றெல்லாம் கேட்கக் கூடாது.
அறுநூறு சேனல்கள் வந்தபின் ரிமோட் இல்லாத டீ.வி நல்ல உடற்பயிற்சியாக இருந்திருக்கும். அது போகட்டும்… நமது வீட்டிற்குள் கலர் டீ.வி யுடன் வந்த இந்த ‘ரிமோட்’தான் இன்றைய ஸ்மார்ட் ஹோம் கருவிகளின் ஆதிபகவன்.
last line puch super sir