Home » காகபுஜண்டரின் காலடி நிழலில்…
ஆன்மிகம்

காகபுஜண்டரின் காலடி நிழலில்…

பொதுவாகவே சித்தர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தையும், அவர்களின் ஆயுள்காலத்தையும் நம்மால் மிகச்சரியாக கணித்து அறியவே முடியாது. சித்தர்கள் அவர்களின் விருப்பக்காலம் வரை, விருப்பப்பட்ட இடங்களில் வாழும் வரம் வாங்கியவர்கள். ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் தோன்றவும், வாழவும் அவர்களால் முடியும். அவர்களின் வயது என்பதெல்லாம் ஒருவகையில் குத்துமதிப்பான ஒரு கணக்குத்தான். போலவே, அவர்கள் வாழ்ந்த காலக்கட்டம் என்பதும் தோராயமான முறையில், ஒரு கணிப்பாகவே சொல்லப்படுகிறது. காரணம், பலசித்தர்கள் சர்வ சாதாரணமாக யுகம், யுகமாய்ப் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய தற்போதைய அறிவு, தெளிவு, தரவு இவைகளைக்கொண்டு சித்தர்களின் வாழ்க்கைமுறையின் அருகில்கூட நம்மால் செல்லமுடியாது.

சித்தர்களுக்கெல்லாம் மகாசித்தர் என்று போற்றி வணங்கப்படுபவர் காகபுஜண்ட சித்தர். அவர் வாழ்ந்த காலத்தையும், அவருடைய ஆயுள் பற்றிய தகவல்களையும் கேட்கும்போது மலைப்பாக இருக்கிறது. பிரளய காலம் வந்து உலகமே அழிந்து போவதையும், பின்பு புதிதாக உலகம் பிறந்து, அதில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்ததையும் ஒன்றல்ல… இரண்டல்ல… பலமுறை இவர் காகத்தின் உருவிலிருந்து நேரில் பார்த்திருக்கிறார் என்கிறார்கள். படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை இவரை நேரில் பார்த்தபோது அவரிடம், “நீவிர், நான் பார்க்கும் 11வது பிரம்மா” என்றாராம் காகபுஜண்டர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!