வீட்டின் மேற்கூரையில் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு நிற்கின்றனர் ஒரு தம்பதியினர். செல்பி எடுப்பதற்கு அல்ல. வீட்டின் உட்கூரை வரை தண்ணீர். வெள்ளம் சூழ்ந்த அப்பகுதியில் மீட்புப் படைக்காகக் காத்து நிற்கின்றனர். உயிர் முதல்பட்சமானதால், உணவும், குடிநீரும் இரண்டாம்பட்சமானது. இதுவரை 4 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் கூரைகளில் உயிர் பிழைத்துக் கூவிக்கொண்டு இருக்கிறார்கள்.
மீட்புப் படகொன்றில் ஏறினர் அத்தம்பதியினர். மூழ்கி நிற்கும் வீட்டைச் சுற்றிக் கடந்து பயணப்படுகிறார்கள். துப்பாக்கிச் சத்தம் படகை அதிர வைக்கிறது. மீட்புக் குழுவினர் அவர்களுக்குத் தைரியமூட்டி வேறுவழியில் படகைத் திருப்புகின்றனர். சில நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் அதிர்வு. சத்தம் இம்முறை காதைத் துளைத்தது. படகும் கிட்டத்தட்ட தூக்கி வீசப்படுமளவு அதிர்ந்தது. இம்முறை மீட்புக் குழுவினரும் தேற்றும் நிலையில் இல்லை. வெடித்தது கண்ணி வெடி.
v informative..well written