அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா ஹாரிஸ். முன்னொருமுறை ஹிலரியும் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்றாலும், ஹிலரியைவிட மக்களுக்கு அதுவும் விளிம்புநிலை மக்களுக்குக் கமலாவுடனான நெருக்கம் அதிகம்.
ஹிலரிக்கு நல்ல நிர்வாகத்திறன் இருப்பினும் கூடுதல் கண்டிப்பினால் மக்களுக்குச் சற்றே ஒரு விலகல் உண்டு. ஒபாமாவின் அமைச்சரவையில் நியுயார்க் செனேட்டராக, அவரின் நிர்வாகத்திறமையை மக்கள் அறிவார்கள். ஆனால் ஒரு மனைவியாக, அவர் கிளிண்டனின் பல தகாத உறவுகளை சகித்துக்கொண்டதைப் பல பெண்களால் ஏற்க முடியவில்லை. கமலாவிற்கு அப்படிப் பழைய நீண்டகால வரலாறு என்று எதுவும் இல்லாதிருப்பதே நன்மையாக இருக்கிறது.
தன் மீதான கொலை முயற்சி, விவாதத்தின் போது சரியாகப் பேசாத பைடன், அதைப் பெரிது படுத்திய ஊடகங்கள், அதிபர் பைடன் நின்றால் நடந்தால் எல்லாமே மறதி நோயால் விளைந்த மாயை என கட்டவிழ்த்த காணொளிகள் என எல்லாமே டிரம்புக்குச் சாதகமாகப் போனது. மீண்டும் எப்போது வெள்ளை மாளிகைக்குப் போகலாம் என நல்ல நேரம் பார்க்கத் தொடங்கிய டிரம்ப் இப்படி ஒரு போட்டி வரும் என்று நினைத்திருக்க மாட்டார்.
Add Comment