அமெரிக்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கிவிட்டிருக்கிறது. அஞ்சல் வழி வாக்களிப்பவர்களும் பதிய ஆரம்பித்துவிட்டார்கள். சீசா விளையாட்டைப் போல, கருத்துக் கணிப்புகள் மாறி மாறி இரண்டு பேருக்குமே சாதகமாக வருகின்றன.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸும் அவருக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா, மிஷல் இன்னும் பல நட்சத்திரப் பேச்சாளர்களும் போட்டி பலமாக இருக்கும் மாநிலங்களில் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
குடியரசுக் கட்சியின் சார்பாக ஒற்றை நட்சத்திரமாக டோனால்ட் டிரம்ப். அவரும் அதே மாநிலங்களில் பேரணிகளும் முழக்கங்களுமாக மக்களிடம் வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
இருதரப்பிலும் பணி செய்பவர்கள், தொலைபேசி, செல்பேசிகளின் குறுஞ்செய்தி, தொலைக்காட்சியில் கண்கவரும் விளம்பரங்கள் என மக்கள் மீது பன்முனைத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரச் செய்தி அனுப்ப வேண்டாம் என்றால் தடுத்துவிடலாம்.
Add Comment