பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடன் மாணிக்கக் கற்கள் பதித்த வெல்வட் ஆடைகளை அணிந்த எழுபத்தைந்து யானைகளின் மாபெரும் பவனி, ‘எசல பெரஹரா’ இந்த மாதம் ஆரம்பமாகிறது. கண்டி மாநகரில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறும் பௌத்த திருவிழா இது. இந்த வருடம் 1712-ஆவது தடவையாக நடைபெறுகிறது. புத்த பெருமானின் தந்தத் தாதுவினை வழிபட்டு, யானையின் மேல் ஏற்றி, நடனக்கலைஞர்களும் பாரம்பரிய வாத்தியக் குழுக்களும் புடைசூழ, நகர்வலமாக எடுத்துச் செல்லும் உலா. ‘எசல’ எனும் சிங்கள மாதத்தில் நாடு முழுவதும் சிறுசிறு பெரஹராக்கள் பல நடக்கின்றன. அவற்றின் மிகப்பெரும் தாயுற்சவம் இது. கண்டியின் அரச மாளிகையில் புனிதமாக வைக்கப்பட்டிருக்கும் தந்தத் தாது வருடமொருமுறை நகரையும் அதன் மக்களையும் தரிசித்து ஆசிர்வதிக்கிறது. இதன் பலனாக ஆகஸ்ட் முடிவில் மழை பொழிவதாகவும், நாட்டில் சுபிட்சம் ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. விவசாயிகளும், வெப்பத்தைத் தாங்க முடியாத மக்களும், பெரஹராவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.
இதைப் படித்தீர்களா?
மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன்.
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு...















Add Comment