Home » இதய ராணி
கிச்சன் கேபினட்

இதய ராணி

ஜாக்கி கென்னடி

ஜாக்குலின் கென்னடி

கறுப்பு நிற ஆடையில் முழங்கால் வரை பூட்ஸ் அணிந்து கம்பீரமாகக் குதிரைமேல் அணிந்திருந்த ஜாக்குலின் கென்னடியைப் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது? தன் அழகால், கம்பீரத்தால் மக்களின் இதயராணியாக மரணமடையும் வரை கொலு வீற்றிருந்தார்.

1929 ஜூலை 28ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு-ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜாக்குலினுக்குச் சிறுவயதிலிருந்தே கலை, இலக்கியம், குதிரைச் சவாரி ஆகியவற்றில் ஆர்வம் அதிகம்.

வாஸர் கல்லூரியில் ஃபிரெஞ்சு இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றைப் படித்த பின்னர் பாரிஸில் உள்ள சோர்பன் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் பயின்றார். இந்த அனுபவம் அவரது ஐரோப்பியக் கலாசார ரசனையை வளர்த்தது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஃபிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின், வாஷிங்டன் டைம்ஸ்-ஹெரால்ட் நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார்.

1952இல் ஒரு விருந்தில், மாசசூசெட்ஸ் செனட்டர் ஜான் எஃப். கென்னடியைச் சந்தித்தார் ஜாக்குலின். இருவருக்கும் இடையே ஆழமான புரிதலும் ஈர்ப்பும் உருவானது. கென்னடி தனது அரசியல் லட்சியங்களைப் பகிர்ந்துகொண்டார், ஜாக்குலினின் கலை, இலக்கிய அறிவு கென்னடிக்குப் பிடித்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!